தினகரனின் பண்ணை வீட்டில் ரகசிய அறைகள்: தம்பி வீட்டிலிருந்து 7 கிலோ தங்கம்

Report Print Kabilan in இந்தியா

சசிகலாவின் உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் வீடுகளில் வருமான வரித்துறையினர் இரண்டாவது நாளாக சோதனை நடத்தி வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் நேற்று புதுவையில் டிடிவி தினகரனுக்கு சொந்தமான பண்ணை வீட்டில் சோதனை மேற்கொண்ட போது அங்கு ரகசிய அறைகள் இருந்ததாம்.

அந்த அறைகளுக்கு மின்சாதன பூட்டு போடப்பட்டிருந்ததால், சிறிது நேர போராட்டத்திற்கு பிறகே அதிகாரிகள் அந்த அறைகளை திறந்ததாகவும், ஆவணங்கள் மற்றும் பொருட்களை கைப்பற்றிய பின்னர் சீல் வைத்து விட்டு சென்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்றும் அந்த ரகசிய அறைகள் திறக்கப்படும் என கூறப்படுகிறது. புதுவை செய்தியாளர்களுக்கே, சோதனை நடந்த பின்னர் தான் தினகரனுக்கு புதுவையில் பண்ணை வீடு இருப்பது தெரியவந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சென்னை நீலாங்கரையில் உள்ள தினகரன் சகோதரர் பாஸ்கரன் இல்லத்தில் 7 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.

மேலும் பல கோடி ரூபாய் அளவில் முறைகேடான பணபரிவர்த்தனை நடந்துள்ளதற்கான ஆவணங்கள் சிக்கி உள்ளதாகவும் தகவல்கள் வெளியிட்டுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்