பெண் பயணியிடம் தவறாக நடந்து கொண்ட விமான ஊழியர்கள்: குமுறிய பெண்

Report Print Raju Raju in இந்தியா

ஏர் ஏசியா விமான நிறுவன ஊழியர்கள் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

இந்தியாவின் ராஞ்சி நகரிலிருந்து பெங்களூருக்கு சென்ற ஏர் ஏசியா விமானத்தில் பெண் ஒருவர் பயணம் செய்யும் போது விமானத்தின் கழிப்பறை அசுத்தமாக இருப்பதாக ஊழியரிடம் கூறியுள்ளார்.

அதற்கு ஊழியர் அவரை தகாத முறையில் தீண்டியதாகவும், விமானத்தில் இருந்து தள்ளிவிடப்போவதாக மிரட்டியதாகவும் பெண் புகார் கூறியுள்ளார்.

மேலும், பெங்களூரு விமான நிலையத்தில் தம்முடன் வாதிட்ட 3 ஏர் ஏசியா பணியாளர்கள் தம்மை சுற்றிவளைத்து பாலியல் பலாத்காரம் செய்யப்போவதாக மிரட்டியதாக புகாரில் அப்பெண் தெரிவித்துள்ளார்.

குற்றச்சாட்டை மறுத்துள்ள ஏர் ஏசியா விமான நிறுவனம், முரட்டுத்தனமாக நடக்கும் பயணிகளை எப்படி நடத்தவேண்டும் என்ற விதியுள்ளதோ, அப்படித்தான் அந்த பயணியையை நடத்தியதாகவும் அவர் தங்களது பணியாளர்களை தொடர்ந்து அநாகரீகமான வார்த்தைகளால் வசைபாடியதாகவும் விளக்கமளித்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...