சிறையில் நிர்வாண சோதனை: மரத்தில் ஏறி கைதிகள் செய்த செயல்

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் இரண்டு கைதிகள் சிறையில் இருக்கும் மரத்தில் ஏறி திடீரென்று தற்கொலைக்கு முயன்ற சமபவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலத்தில் உள்ள மத்திய சிறையில் இரண்டு கைதிகள் கஞ்சா வைத்திருப்பதாக பொலிசாருக்கு தகவல் வந்துள்ளது.

இதனால் சிறை அதிகாரிகள் ஸ்டீபன் ராஜ், பிரகாஷ் என்கிற இரண்டு கைதிகளை அழைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ஆனால் அவர்கள் இல்லை என்று மறுத்ததை அடுத்து அவர்களின், ஆடையை கலைந்து சோதனை நடத்தியுள்ளனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அந்த கைதிகள் திடீரென்று அங்கிருக்கும் மரத்தின் மீது ஏறி, உடலில் பிளேடால் கிழித்துக் கொண்டு தற்கொலைக்கு முயற்சித்தனர்.

அதன் பின் சிறைத்துறை கண்காணிப்பாளர் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து கைதிகள் இருவரும் மரத்தில் இருந்து கீழிறங்கி வந்தனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...