கமல் மீது வழக்கு: ஒருவாரத்தில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Report Print Samaran Samaran in இந்தியா

இந்துக்களை அவதூறாக பேசியதாக கமல்ஹாசன் மீது வழக்குபதிவு செய்ய வேண்டும் என தொடரப்பட்ட வழக்கில் ஒருவாரத்தில் பதிலளிக்க காவல்துறை ஆணையருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரபல நாளிதழுக்கு அளித்த பேட்டியில் நடிகர் கமல்ஹாசன் ஹிந்து தீவிரவாதம் இல்லை என கூறமுடியாது என தெரிவித்திருந்தார்.

கமலின் இந்த பேச்சு இந்துக்களின் மனதை புண்படுத்தும் நோக்காக அமைந்துள்ளது என்றும், மத நல்லிணத்துக்கு கேடு விளைக்கும் எனவும் கோரி அவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டுமென தேவராஜ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

மேலும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தும் அதில் எந்தவித நடவடிக்கையும் இல்லை எனவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, கமல் மீது வழக்குப்பதிவு செய்வது தொடர்பாக காவல்துறை ஆணையர் ஒருவாரத்தில் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்