நடிகைக்கு ஆதரவாக மாநில அரசு: வியப்பில் இந்திய மக்கள்

Report Print Samaran Samaran in இந்தியா

நடிகை தீபிகா படுகோனேவை மிரட்டியவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து முதலமைச்சர் சித்தராமையா தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்துத் தெரிவிக்கையில், 'பத்மாவதி' என்ற இந்தி திரைப்படத்தில் நடித்துள்ள தீபிகா படுகோனேவுக்கு ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த பாரதீய ஜனதா கட்சியின் பிரமுகரால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் அவர் தெரிவிக்கையில் பாரதீய ஜனதாவின் வெறுப்புக் கலாசாரத்தை நான் கடுமையாக கண்டிக்கிறேன். தீபிகா படுகோனே உலக அளவில் புகழ் பெற்ற நடிகை. அவருக்கு ஆதரவாக கர்நாடக அரசு நிற்கிறது. நான் ஹரியானா முதலமைச்சரிடம் பேசினேன்.

அவருக்கு மிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கூறியுள்ளேன். தீபிகா படுகோனே கர்நாடகத்தை சேர்ந்தவர். அவர் கர்நாடகம் வரும்போது அவருக்கும்இ அவரது குடும்பத்தினருக்கும் தேவையான பாதுகாப்பு வழங்கப்படும்' என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers