மகள் தற்கொலை செய்து கொண்டதை அறிந்த தாயும் உயிரை விட்ட பரிதாபம்

Report Print Raju Raju in இந்தியா

மகள் தற்கொலை செய்ததால் மனமுடைந்த தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டின் கடலூரை சேர்ந்தவர் சரஸ்வதி (58), இவரது மகள் சைலஜா (26) . இவர் எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டிலேயே சும்மா இருந்த நிலையில் சரஸ்வதி கண்டித்துள்ளார்.

இதன் காரணமாக தாய்க்கும், மகளுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் தனது சித்தப்பா வீட்டுக்கு சென்று சைலஜா தங்கியுள்ளார்.

இந்நிலையில், மனமுடைந்த நிலையில் இருந்த சைலஜா நேற்று முன்தினம் சித்தப்பா வீட்டில் மின் விசிறியில் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்த தகவலை அறிந்த சரஸ்வதி அதிர்ச்சியடைந்தார், இதையடுத்து மகள் இறந்த துக்கத்தில் அவரும் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார், சம்பவம் குறித்து பொலிசார் விசாரித்து வருகிறார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்