சொந்த மாமாவை கொன்றது ஏன்? கைதான வாலிபரின் திடுக்கிடும் வாக்குமூலம்

Report Print Kabilan in இந்தியா

தன் தாய்க்கு சொத்து கிடைக்காமல் முழுவதும் மாமாவுக்கே சென்றுவிட்டதால் கொலை செய்ததாக விவசாயி கொலை வழக்கில் கைதான இளைஞர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள செம்மாம்பாளையத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி.

விவசாயியான இவருக்கு ருக்குமணி என்ற மனைவியும், துரைசாமி(10), மோகன்குமார்(4) என்ற இரண்டு மகன்களும் உள்ளனர்.

கடந்த 19ஆம் திகதி இரவு தோட்டத்து வீட்டின் வெளியில் பழனிச்சாமியும், அவரின் மகன் துரைசாமியும் கட்டிலில் தூங்கியுள்ளனர்.

அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர், தான் கொண்டு வந்த அரிவாளால் தூங்கிக்கொண்டிருந்த பழனிச்சாமியை வெட்டினார்.

சத்தம் கேட்டு எழுந்த மகன் துரைசாமியையும் அவரை வெட்டியுள்ளார், ரத்தவெள்ளத்தில் இருந்த பழனிச்சாமி சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார், சிறுவனுக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பழனிசாமியின் மனைவி ருக்மணி, மோகன்குமார் மற்றும் அக்கம் பக்கத்தினரும் அங்கு ஓடி வந்தனர்.

கொலையாளி தப்பி ஓடிய நிலையில், காயமடைந்த சிறுவன் கோபியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வரப்பாளையம் பொலிசார், பழனிச்சாமியின் உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். பொலிஸ் விசாரணையில், பழனிச்சாமியின் அக்காள் மகன் சதீஷ்குமார் தான் கொலையாளி என தெரியவந்தது.

குற்றத்தை ஒப்புக்கொண்ட சதீஷ்குமார் அளித்த வாக்குமூலத்தில், என்னுடைய தாத்தாவுக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலத்தை, அவருக்கு பின் என் அம்மாவுக்கும், மாமாவுக்கும் சரிபாதியாக பிரித்துத் தருவார் என நினைத்தேன்.

ஆனால், அவர் மாமா பழனிச்சாமிக்கே 10 ஏக்கர் நிலத்தையும் எழுதி வைத்துவிட்டு இறந்துவிட்டார்.

என் அம்மாவுக்கு கிடைக்காமல் சொத்து முழுவதும் மாமாவுக்கே சென்றதால், ஆத்திரத்தில் அவரை அரிவாளால் வெட்டிக் கொன்றேன்’ என தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, சதீஷ்குமாரை பொலிசார் சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers