நடிகையுடன் நித்யானந்தா இருக்கும் வீடியோ உண்மை தான்! உயர்நீதிமன்றம் தீர்ப்பு

Report Print Deepthi Deepthi in இந்தியா
2757Shares
2757Shares
ibctamil.com

2010 ஆம் ஆண்டில் நடிகையுடன் சாமியார் நித்யானந்தா இருக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆனால், இந்த வீடியோ பொய்யானது என்றும் தவறாக சித்தரிக்கப்பட்டது என்று நித்யானந்தா டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வீடியோவை ஆராய்ந்த டெல்லி தடய அறிவியல் ஆய்வகம், இது உண்மையான வீடியோதான், இது சித்தரிக்கப்பட்டது கிடையாது என்பது நிரூபமணமாகியுள்ளது என்று தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இந்த வீடியோவை வெளியிட்ட நித்யானந்தாவின் மாஜி சீடர் லெனின் கருப்பன் கூறியதாவது, இந்த வீடியோ மூலம் அவரது உண்மை முகம் அம்பலமாகிவிட்டது என கூறியுள்ளார்.

டிசம்பர் 5ம் தேதி நித்தியானந்தா வீடியோ வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது. நித்தியானந்தா ஆசிரமம் நிர்வாகிகள் என் மீது 19 வழக்குகள் போட்டுள்ளனர் என்று லெனின் கருப்பன் கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்