திருப்பதி கோவில் உண்டியல் குறித்து அவதூறு: நடிகர் விஜய் தந்தை மீது புகார்

Report Print Raju Raju in இந்தியா
373Shares
373Shares
lankasrimarket.com

திருப்பதி உண்டியல் குறித்து அவதூறாகப் பேசிய நடிகர் விஜய்யின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் மீது காவல்துறை ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்து மக்கள் முன்னணியின் மாநில அமைப்பாளர் நாராயணன் கொடுத்துள்ள புகார் மனுவில் கடந்த 22-ஆம் திகதி எஸ்.ஏ.சந்திரசேகர் விசிறி திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் பேசியபோது திருப்பதி உண்டியலை லஞ்சம் பெறும் உண்டியல் எனக் குறிப்பிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் உண்டியலில் காணிக்கை செலுத்தினால் தேர்வில் தேர்ச்சி பெற முடியுமா என கேள்வி எழுப்பிப் பேசியதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்துக்களின் நம்பிக்கையை சீர்குலைக்கும் வகையில் பேசிய எஸ்.ஏ.சந்திரசேகர் மீது மத துஷ்பிரயோக அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யுமாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்