ரயிலுக்கும், பிளாட்பாரத்துக்கும் இடையே சிக்கிக் கொண்ட நபர்! அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார்

Report Print Fathima Fathima in இந்தியா

இந்தியாவில் ப்ளாட்பாரத்துக்கும், ரயிலுக்கும் இடையே சிக்கிக் கொண்ட வாலிபர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார்.

மும்பை ரேரோடு பகுதியை சேர்ந்தவர் முஸ்தபா சேக்(வயது 24), தாய் மற்றும் சகோதரனுடன் வசித்து வரும் முஸ்தபா நேற்று முன்தினம் காலை 10 மணியளவில் மஸ்ஜித் ரயில் நிலையத்துக்கு வந்துள்ளார்.

அங்கிருந்து சிஎஸ்எம்டி-க்கு செல்ல முயன்ற போது, 3வது பிளாட்பாரத்திற்கு செல்வதற்காக தண்டவாளத்தை கடக்க முயன்றார்.

அப்போது அவ்வழியாக வந்த ரயிலை கவனிக்கவில்லை, ஹார்ன் அடித்ததும் என்ன செய்வதென்று தெரியாமல் உடனடியாக ப்ளாட்பாரத்தில் ஏற முயற்சித்தார்.

அதற்குள் ரயில் வரவே ப்ளாட்பாரத்துக்கு இடையில் சிக்கிக் கொண்டார்.

ரயில் வேகம் குறைவாக வந்ததால் மாபெரும் விபத்து தவிர்க்கப்பட்டது, எனினும் அவரை சிறிது நேரம் இழுத்துச் சென்று விட்டே நின்றது.

உடனடியாக பாதுகாப்பு பணியில் இருந்த ரயில்வே பொலிசார் முஸ்தபாவை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

சிறு காயங்கள், சிராய்ப்புகளுடன் முஸ்தபா சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...