தமிழகத்தை தாக்க வருகிறதா ‘ஓகி’ புயல்?

Report Print Gokulan Gokulan in இந்தியா

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் உருவாகியிருந்த காற்றத்தழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியிருந்தது.

இதனால் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருந்த நிலையில் கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை போன்ற தென் மாவட்டங்களில் கனமழையும், சென்னையில் விட்டு விட்டு கனமழையும் பெய்து வருகிறது.

இந்நிலையில் வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது மேற்கு, வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து புயலாக மாற வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

மேலும், தற்போது கன்னியாகுமரிக்கு தென்கிழக்கே 170 கி.மீ தூரத்தில் நிலைகொண்டுள்ள இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்னும் 12 மணி நேரத்தில் புயலாக மாற வாய்ப்பிருப்பதாகவும், இதனால் தென்மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் எச்சரித்துள்ளது.

இந்த புதிய புயல் சின்னத்தின் பெயர் ‘ஓகி’ எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...