பிக்பாஸில் நாதஸ்வரத்தை அவமதித்த வழக்கு: விசாரணைக்கு தடை

Report Print Fathima Fathima in இந்தியா

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நாதஸ்வரத்தை அவமதித்ததாக தொடரப்பட்ட வழக்கில் விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது வழங்கப்பட்ட ஒரு டாஸ்கில் நாதஸ்வரக் கலைஞரை போல் நடித்த சக்தி நாதஸ்வரத்தை தூக்கி எறிந்ததாகவும், கேட்பாரற்று கிடந்ததாகவும் தெரிகிறது.

இது அக்கலைஞர்களிடையே கொதிப்பை ஏற்படுத்த தமிழ்நாடு இசை வேளாளர்கள் இளைஞர் நலச் சங்கத்தின் தலைவர் சார்பில் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், விஜய் டிவி, எண்டமோல் இந்தியா, நடிகர் கமல் உள்ளிட்டவர்கள் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

இதனை ரத்து செய்யக்கோரி விஜய் டிவி மற்றும் எண்டமோல் இந்தியா நிறுவனத்தின் சார்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இன்று அந்த மனு விசாரணைக்கு வந்த நிலையில், தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார், மேலும் வழக்கு குறித்து வேளாளர் சங்கம் பதிலளிக்கவும் உத்தரவிட்டார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...