22 குண்டுகளால் துளைத்து கொல்லப்பட்ட தொழிலதிபர்: டெல்லியில் பயங்கரம்

Report Print Arbin Arbin in இந்தியா

டெல்லியில் சில நாட்களுக்கு முன்பு நடந்த கொலை ஒன்றின் அதிர வைக்கும் சிசிடிவி பதிவுகள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய தலைநகர் டெல்லியின் பிரம்மபுரி பகுதியில் சில நாட்களுக்கு முன்பு வஷித் என்ற தொழில் அதிபர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார்.

ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வந்த அவர் தொழில் பகை காரணமாக கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று கூறப்பட்டது.

இந்த கொலை நடந்து பல நாட்கள் ஆகியும் வழக்கில் எந்த விதமான முன்னேற்றமும் ஏற்படாமல் இருந்தது.

கொலை செய்யப்பட்ட வஷித் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. அப்போது அவர் உடலில் இருந்து மொத்தமாக 22 குண்டுகள் அகற்றப்பட்டது.

இந்த நிலையில் குறித்த கொலையில் மூன்று பேருக்கு தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்தது. இதனையடுத்து வஷித்திற்கு போட்டியாக இருக்கும் ரியல் எஸ்டேட் நிறுவன அதிபர்களை விசாரணை செய்தனர்.

மேலும் அவர்கள் இந்த கொலையை ஆள் வைத்து செய்து இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரித்தனர்.

இந்த விசாரணை முடிவில் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். ஆனால் இவர்களுக்கு எதிராக சாட்சியம் இல்லாமல் பொலிசார் திணறி வந்தனர்.

தற்போது இந்த கொலை வழக்கில் முக்கியம் திருப்பம் ஒன்று ஏற்பட்டு இருக்கிறது. அதன்படி இந்த கொலையின் சிசிடிவி வீடியோ வெளியாகி உள்ளது.

அதில் வஷித்தை சிலர் துரத்தி துப்பாக்கியால் சுடுகின்றனர். அவர் வேகமாக ஒரு வீட்டுக்குள் ஓடுகிறார். அவரை வெளியே இழுத்து சாலையில் போட்டு மீண்டும் துப்பாக்கியால் சுடுகின்றனர்.

அவர்கள் ஹெல்மெட்டுடன் இந்த கொலையை செய்துள்ளனர். தற்போது இதை முக்கிய சாட்சியமாக பயன்படுத்த பொலிஸ் தரப்பு முடிவு செய்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்