இளம் வயதில் வாய்ப்புகள் மறுக்கப்பட்டது: 67 வயதில் பட்டம் வென்ற மூதாட்டியின் அடுத்த ஆசை

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் இளம் வயதில் வாய்ப்புகள் மறுக்கப்பட்டதால், மூதாட்டி ஒருவர் விடா முயற்சியின் மூலம் பட்டம் பெற்று அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார்.

செல்லத்தாயி, தமிழகத்தைச் சேர்ந்த, இவர் 67 வயதில் தன்னுடைய எம் ஏ பட்டத்தை ஆளுநர் கையில் பெற்றார்.

அதன் பின் நான் மேலும் படிக்க விரும்புவதாக கூறியதால், அவரின் விடா முயற்சியை ஊடகங்களில் அவர் தொடர்பாக செய்திகள் வைரலாக பரவின.

இந்நிலையில், செல்லத்தாயி-யை நேரில் அழைத்து தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக் கழக துணை வேந்தர் பாஸ்கரன் கெளரவித்துள்ளார்.

அத்துடன், செல்லத்தாயி மேலும் படிக்க விரும்பும் படிப்புகளுக்கான அனைத்து கட்டணங்களையும் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக் கழகமே ஏற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers