அண்ணனின் காதலுக்காக கொலை செய்யப்பட்ட தம்பி: நடந்தது என்ன?

Report Print Raju Raju in இந்தியா

அண்ணனின் காதலுக்காக தம்பி கொலை செய்யப்பட்ட வழகில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில் தலைமறைவாக உள்ள மற்ற இருவரை பொலிசார் தேடி வருகின்றனர்.

தமிழ்நாட்டின் நெல்லையை சேர்ந்த ஞானதிரவியம் என்பவரது தோட்டத்தை அமலதாஸ் என்பவர் குத்தகைக்கு எடுத்து பயிர் செய்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த 25-ம் திகதி வாலிபர் ஒருவர் தோட்டத்தில் சடலமாக கிடக்க இது குறித்து பொலிசாருக்கு தகவல் தரப்பட்டது.

பொலிசார் நடத்திய விசாரணையில் இறந்தவர் வீரவநல்லூரை சேர்ந்த ஜேம்ஸ் என்பது தெரியவந்தது.

கொலைக்கான காரணம் குறித்த பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஜேம்ஸ்சின் சகோதரர் அபேத் ராஜகுரு என்பவர் சென்னையில் உள்ள உறவினர் இசக்கிதாஸ் என்பவரது வீட்டில் தங்கியிருந்து அவரது உதவியாளராக வேலை பார்த்து வந்தார்.

அப்போது அவருக்கும், இசக்கிதாசின் மகளுக்கும் காதல் ஏற்பட்டதையடுத்து வேலையை விட்டு ராஜகுருவை இசக்கிதாஸ் நீக்கியுள்ளார்.

இதையடுத்து சொந்த ஊருக்கு ராஜகுரு திரும்பியுள்ளார். இதனிடையே இசக்கிதாஸ், தனது மகளை வீரவநல்லூரை சேர்ந்த டேனியல் என்பவருக்கு திருமணம் செய்து கொடுக்க முடிவு செய்துள்ளார்.

திருமணத்திற்காக வீரவநல்லூருக்கு வந்த இசக்கிதாசின் மகள் மீண்டும் ராஜகுருவை சந்தித்து தனது காதலை புதுப்பித்துள்ளார்.

இதையறிந்த பெண்ணின் உறவினர்கள் சில தினங்களுக்கு முன்னர் ராஜகுரு வீட்டுக்கு ஆயுதங்களுடன் சென்றுள்ளனர்.

அப்போது வீட்டில் ராஜகுருவின் தம்பி ஜேம்ஸ் மட்டும் இருந்ததால் அவரை மிரட்டியுள்ளனர்.

இதன் காரணமாக ஜேம்ஸ்சிற்கும் அந்த கும்பலுக்கும் மோதல் ஏற்பட்ட நிலையில், பெண் வீட்டார் ஜேம்சை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியுள்ளனர்

இதையடுத்து கடந்த 24-ம் திகதி ஜேம்ஸுக்கு போன் செய்த இசக்கிதாஸ் தரப்பினர் பிரச்சினையை பேசி தீர்த்துக் கொள்ளலாம் என அழைத்துள்ளார்.

இதை நம்பி அவர்கள் சொன்ன இடத்துக்கு ஜேம்ஸ் சென்ற நிலையில் அவரை அந்த கும்பல் கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது.

கொலை தொடர்பாக பொலிசார் பெண்ணின் தாய் மாமாவான ரமேஷ், உறவினரான செல்வத்தை கைது செய்துள்ளனர்.

மேலும் தலைமறைவாக உள்ள டேனியல் மற்றும் பிரதீப் என்பவரை தேடி வருகிறார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers