ஞானம் வழங்கிய சீமானுக்கு நன்றி: இயக்குனர் சேரன்

Report Print Gokulan Gokulan in இந்தியா

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும், அவரது தம்பிகளுக்கும் தனக்கு அரசியல் ஞானம் வழங்கியதற்காக ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார் இயக்குனர் சேரன்.

சமீபகாலமாக தமிழக அரசியல் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் இயக்குனரும் நடிகருமான சேரன் தொடர்ந்து கருத்து தெரிவித்து வந்தார்.

இந்நிலையில் இனி அரசியல் சார்ந்து எந்த கருத்தும் பதிவிடப்போவதில்லை, யாரை பற்றியும் பேசப்போவதில்லை. சினிமா சார்ந்து மட்டுமே பேசுவோம்.

எனக்கும் எந்த அரசியல் கடைகளுக்கும் சம்பந்தமில்லை, நான் சென்னை வந்தது சினிமா எடுக்க, அந்த வேலையை மட்டும் பார்க்கிறேன், இனி என் கருத்து திரையில் என பதிவிட்டுள்ளார்.

மேலும் இந்த ஞானத்தை தனக்கு வழங்கிய சீமானுக்கும், அவரது தம்பிகளுக்கும் நன்றி என பதிவிட்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers