ஜெயலலிதா குறித்து அவரது அண்ணன் பரபரப்பு பேட்டி

Report Print Deepthi Deepthi in இந்தியா

ஜெயலலிதாவிற்கும் சோபன்பாபுவிற்கும் குழந்தை பிறந்தது உண்மை என்று அவரது அண்ணன் வாசுதேவன் பேட்டியளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாசுதேவன், மைசூரு மாவட்டம் டி.நரசிபுரா தாலுகாவிலுள்ள ஸ்ரீரங்கபுராவில் வசித்து வருகிறார்.

இவர் அளித்துள்ள பேட்டியில், எனது தந்தையின் இரண்டாவது மனைவி சந்தியா அம்மாவின் மகளாக இருந்தாலும் நான் ஜெயலலிதாவை சொந்த தங்கையாகவே நினைத்தேன்.

ஜெயலலிதாவிற்கும் சோபன்பாபுவிற்கும் குழந்தை பிறந்தது உண்மைதான்; ஹைதராபாத்தில் வைத்து காப்பாற்றினார்கள். ஜெயலலிதாதான் திருமணம் செய்து வைத்தார். அந்த குழந்தை எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை.

ஜெயலலிதாவிற்கு சோபன்பாபு மூலம் குழந்தை பிறந்தது என்று சசிகலாவிற்கும், நடராசனுக்கும் நிச்சயம் தெரியும். இப்போது தீபா, தீபக், நானும்தான் ஜெயலலிதாவின் சொத்துக்களுக்கு வாரிசு.

மேலும், ஜெயலலிதாவுக்கு சென்னையில் பிரசவம் நடந்ததாக கூறப்படுவது தவறான தகவல் என்றும் அவர் எங்கள் குடும்ப உறுப்பினர்கள் யாருடனும் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ளவில்லை என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்