உயிருக்கு போராடும் என் மகனை காப்பாத்துங்க..மன்றாடும் ஏழை தந்தை

Report Print Santhan in இந்தியா

இரத்த புற்றுநோயுடன் போராடும் தனது மகனை காப்பாற்றுங்கள் என்று கூறி அவரது தந்தை நிதி உதவி கேட்டுள்ளார்.

மும்பையைச் சேர்ந்தவர் சந்தோஷ் கதம், சேல்ஸ்மேனாக பணியாற்றி வரும் இவருக்கு ஸ்ரீ என்ற 3.5 வயது மகன் உள்ளார்.

இந்நிலையில் சந்தோஷ் தனது மகன் ஸ்ரீ-வுடன் சமீபத்தில் பூங்காவில் ஓடி பிடித்து விளையாடியுள்ளார். அப்போது ஸ்ரீக்கு அதிகமாக மூச்சு வாங்கியுள்ளது. அதன் பின் சிறிது நேரத்தில் சிறுவனின் கைகள், உதடுகள் வெளிறிப் போயுள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக ஸ்ரீ-யை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். இதையடுத்து மருத்துவமனையில் சிறுவனை பரிசோதனை செய்த போது, இரத்த புற்றுநோய் இருப்பது தெரியவந்துள்ளது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஸ்ரீயின் சிகிச்சைக்கு பணம் இல்லாமல் அவரது தந்தை சந்தோஷ் கஷ்டப்பட்டு வருகிறார்.

அதுமட்டுமின்றி 6 மாதங்கள் கீமோதெரபி கொடுத்தால் புற்றுநோய் குணமாகிவிடும் என்றும், அதற்கு 12 லட்சம் ரூபாய் வரை செலவாகும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சந்தோஷ் தனது மகனின் சிகிச்சைக்காக இதுவரை 90 ஆயிரம் ரூபாய் செலவு செய்துள்ளார். வேலை பார்க்கும் இடத்தில் இருந்து 50 ஆயிரம் ரூபாய் வேறு கடன் வாங்கியுள்ளார்.

மாதம் வாங்கும் 8 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் வீட்டின் வாடகைக்கு 4000 ஆயிரம் ரூபாய் போக மீதி பணத்தை வைத்து தான் அவர் குடும்பத்தையே ஓட்டுகிறார். இப்படி தனது மகனுக்கு இது போன்ற உயிரைக் குடிக்கும் நோய் வந்துள்ளதால், அவனை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என்று கூறி மற்றவர்களின் உதவியை இவர் நாடியுள்ளார்.

ஸ்ரீ-க்கு உதவ நினைப்பவர்கள் Ketto மூலம் உதவி செய்து அவரது உயிரை காப்பாற்றலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்