இலங்கை வீரர்கள் மாஸ்க் அணிந்து விளையாடியது வெட்ககேடானது: மம்தா பானர்ஜி

Report Print Santhan in இந்தியா

டெல்லியில் நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை வீரர்கள் மாஸ்க் அணிந்து விளையாடியதை நான் வெட்கமாக உணர்கிறேன் என்று மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

இந்தியா வந்துள்ள இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகள் மோதிக்கொண்ட மூன்றாவது டெஸ்ட் போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது.

இப்போட்டியின் போது காற்று மாசுபாடு காரணமாக இலங்கை வீரர்கள் முகத்தில் மாஸ்க் அணிந்து கொண்டு, விளையாடினர்.

இந்நிலையில் மேற்குவங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, வெளிநாட்டில் இருந்து வந்து சர்வதேச போட்டியை விளையாடும் வீரர்கள் மாஸ்க் அணிவது சரியானது கிடையாது. காற்று மாசுபாடு ஒவ்வொரு நாளும் மோசமாகி வருகிறது.

இது நாட்டிற்கு நல்ல பெயரை வாங்கி கொடுக்காது. மாசுபாட்டை டெல்லி கட்டுப்படுத்த வேண்டும்.

இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மாஸ்க் அணிந்து விளையாடியதாக வெட்கமாக நான் உணர்கிறேன், இல்லையெனில் இதனை நான் சொல்லியிருக்க மாட்டேன். இது அரசியல் பிரச்சனை கிடையாது, உண்மையான பிரச்சனை என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்