விஜயகாந்துக்குப் பிடிவாரன்ட்!

Report Print Arbin Arbin in இந்தியா

செய்தியாளரைத் தாக்கிய வழக்கில் தே.மு.தி.க பொதுச் செயலாளர் விஜயகாந்துக்கு சென்னை ஆலந்தூர் நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்தது.

சென்னை விமான நிலையத்தில் தனியார் பத்திரிகை செய்தியாளரை கடந்த 2013-ல் தாக்கியதாக தே.மு.தி.க பொதுச் செயலாளர் விஜயகாந்த் மீது புகார் எழுந்தது.

இதுதொடர்பான வழக்கு சென்னை ஆலந்தூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கின் விசாரணை கடந்த முறை நடந்தபோது, விஜயகாந்த் இன்று நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது விஜயகாந்த் ஆஜராகவில்லை.

பலமுறை சம்மன் அனுப்பியும் விஜயகாந்த் நேரில் ஆஜராகவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து, விஜயகாந்துக்குப் பிடிவாரன்ட் பிறப்பித்து ஆலந்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வருடாந்தர மருத்துவப் பரிசோதனைக்காக அவர், சிங்கப்பூர் சென்றிருப்பதாகத் தே.மு.தி.க வட்டாரத்தில் கூறப்படுகிறது. இந்தநிலையில், நீதிமன்றம் அவருக்குப் பிடிவாரன்ட் பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்