நடிகர் விஷாலின் மனு நிராகரிப்பு: நிமிடத்திற்கு நிமிடம் திருப்பம் ஏற்பட்டதாக குமுறல்

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் இடைத்தேர்தலில் போட்டியிட்ட நடிகர் விஷால் தாக்கல் செய்த வேட்பு மனுவை, தேர்தல் அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக நிராகரித்துள்ளனர்.

தமிழகத்தின் சென்னையில் உள்ள ஆர்.கே.நகர் தொகுதியில் வரும் 21-ஆம் திகதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளதால், போட்டியிடும் வேட்பாளர்கள், தங்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

அதன் படி இங்கு போட்டியிடும் நடிகர் விஷாலும் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். விஷால் மனு மீதான பரிசீலனை இரண்டரை மணி நேரமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.

இறுதியில் விஷால் வேட்புமனுவை நிராகரிப்பதாகத் தேர்தல் அதிகாரி வேலுச்சாமி அறிவித்தார். வேட்புமனுவைத் தாக்கல் செய்பவரை அந்தத் தொகுதியைச் சேர்ந்த 10 பேர் முன் மொழிய வேண்டும் என்பது விதி.

ஆடியோவை கேட்க...

ஆனால், விஷால் தாக்கல் செய்த வேட்பு மனுவை முன்மொழிந்ததாக காணப்படும் பத்து பெயர்களில் விஷாலை முன்மொழியாத இரு பெயர்கள் இணைக்கப்பட்டுள்ளதால் அவரது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

பின்னர் தேர்தல் அதிகாரியிடம், முன்மொழிந்தவர்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதாக கூறப்படும் ஆடியோ ஆதாரத்தை விஷால் வெளியிட்டார். மிரட்டலுக்கு உள்ளானதாக கூறப்படும் வேலு என்பவரிடம் விஷால் பேசிய ஆடியோ ஆதாரத்தை காண்பித்திருக்கிறார்.

இந்த ஆடியோ ஆதாரத்தை ஆய்வு செய்த தேர்தல் அதிகாரி சில திருத்தங்கள் செய்த பின்னர் விஷாலின் வேட்பு மனு ஏற்கப்பட்டதாக செய்திகள் வெளியானது.

இந்நிலையில், நடிகர் விஷாலின் வேட்புமனுவை பரிசீலினை செய்த தேர்தல் அதிகாரிகள் அவரின் ஆதாரத்தை ஏற்க மறுத்து, வேட்பு மனுவை நிராகரிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் விஷால், சுயேட்சை வேட்பாளர் ஒருவரை நிச்சயம் வெற்றி பெற வைப்பேன் என்று கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்