இந்திய பாக் எல்லையில் பதட்டம்: இந்திய ராணுவம் பதிலடி

Report Print Samaran Samaran in இந்தியா
இந்திய பாக் எல்லையில் பதட்டம்: இந்திய ராணுவம் பதிலடி

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ராஜோரி மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் இந்திய நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இந்திய ராணுவமும் சரியான பதிலடியை கொடுத்தது. மாலை 5:30 மணியளவில் தொடங்கிய துப்பாக்கி சண்டை 6:20 வரையில் நீடித்தது என ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பாகிஸ்தான் நவம்பர் மாதம் 29 மற்றும் 28 தேதிகளில் சுந்தர்பானி மற்றும் பூஞ்ச் செக்டாரில் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. முன்னதாக 15 முதல் 17-ம் தேதி வரையில் ஜம்மு மற்றும் பூஞ்ச் மாவட்டங்களில் எல்லைப்பகுதியில் அத்துமீறிய தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவம் ஈடுபட்டது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்