கணவனின் ரத்தத்தை குடித்து கொன்ற மனைவி: என்ன காரணம் தெரியுமா?

Report Print Printha in இந்தியா
571Shares

பெங்காலின் அருகே உள்ள சைரைபூர் எனும் பகுதியில் வசிக்கும் சபித்திரி எனும் பெண் சடங்கு என்ற பெயரில் தனது கணவரின் வாயில் சூலத்தை குத்தி தினமும் ரத்தம் குடித்து வந்துள்ளது பொலிஸாருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சபித்திரியின் கணவர் திடீர் மரணம் அடைந்து விட்டதால், ஊர் மக்கள் மற்றும் உறவினர்கள் பல குற்றச்சாட்டுக்களை எழுப்பி பொலிஸில் புகார் அளித்தனர். அதன் பேரில் பொலிஸார் விசாரணை நடத்தினர்.

ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் சபித்திரி தனது கணவர் அபிஜித்தின் நாக்கில் திரிசூலத்தை குத்தி அவரது வாயில் இருந்து வரும் ரத்தத்தை குடிப்பதை ஒருவிதமான சடங்கு போல பின்பற்றி வந்தார் என்பதை அபித்திரியின் மாமியார் பொலிஸிடம் கூறியுள்ளார்.

சபித்திரியின் வீட்டருகே வசித்து வந்தவர்கள், கூட இவர் எப்போதுமே சற்று விசித்திரமாக தான் நடந்துக் கொள்வார். அவரது ஒவ்வொரு செயலையும் காண்பதற்கு வித்தியாசமாக தான் இருக்கும்.

நாங்கள் அவரை சூனியக்காரி என்று கருதினோம். அதனால் சபித்திரியின் கணவர் திடீர் மரணத்தில் தங்களுக்கு சந்தேகம் இருந்ததாக கூறியுள்ளார்கள்.

மேலும் இது குறித்த விசாரணையில், சபித்திரியின் இந்த விசித்திர பழக்கத்தால், அவரது கணவரின் உடலில் ரத்த பற்றாக்குறை ஏற்பட்டு உயிர் பிரிந்துள்ளது என்பது தெரியவந்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்