மீண்டும் சர்ச்சையில் நடிகர் விஷால்

Report Print Arbin Arbin in இந்தியா

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதில் அளுங்கட்சியின் தலையீடு இருப்பதாகக் கூறி மாநில தேர்தல் ஆணையத்திற்கு நடிகர் விஷால் புகார் அளித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தல் மற்றும் பொதுத்தேர்தல்களை அதிகாரப்பூர்வமாக நடத்துவது இந்திய தேர்தல் ஆணையமே.

இதில் வேட்பாளரோ அல்லது வேட்பாளர்களுக்கு எதிராக பொதுமக்களோ ஏதேனும் சந்தேகமோ அல்லது புகாரோ அளிக்க வேண்டும் என்றால் அவர்கள் இந்திய தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட அதிகாரிகளிடம் தான் புகார் அளிக்க வேண்டும். மேலும் அந்த புகார் மனுவில் இந்திய தேர்தல் ஆணையத்தின் முகவரியைதான் குறிப்பிட வேண்டும்.

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷால் தாக்கல் செய்த வேட்புமனு ஏற்றுக்கொளப்படாமல் நிராகரிக்கப்பட்டது.

இதனை எதிர்த்து நடிகர் விஷால் இன்று மாலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் புகார் மனு ஒன்றை அளித்தார்.

அதில் தன்னுடைய வேட்புமனு நிராகரிக்கப்பட்டதற்கு ஆளுங்கட்சிதான் காரணம் எனவும் அது குறித்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டு இருந்தார்.

ஆனால் இந்த புகார் மனுவில் இந்திய தேர்தல் ஆணையத்தின் முகவரியை குறிப்பிடுவதற்கு பதிலாக சென்னையில் உள்ள மாநில தேர்தல் ஆணையத்தின் முகவரியை விஷால் குறிப்பிட்டு இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு மட்டுமே மாநில தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளது. இடைத்தேர்தலிலும், பொதுத்தேர்தலிலும் மாநில தேர்தல் ஆணையத்திற்கு முடிவு எடுக்ககூடிய எந்த அதிகாரமும் கிடையாது.

மாநில தேர்தல் ஆணையத்திற்கும் இந்திய தேர்தல் ஆணையத்திற்கும் உள்ள வித்தியாசம் கூட நடிகர் விஷாலுக்கு தெரியவில்லை என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

இதனால் நடிகர் விஷால் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் அளித்த புகார் மனு ஏற்றுக்கொள்ளப்படுமா அல்லது நிராகரிக்கப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்