கணவரை எரித்து வீட்டிற்குள் புதைத்த மனைவி: 13 ஆண்டுகள் கழித்து அம்பலமான தகவல்

Report Print Deepthi Deepthi in இந்தியா
645Shares
645Shares
ibctamil.com

தானே நகரில் 13 அண்டுகளுக்கு முன்னர் கணவரை கொலை செய்து வீட்டிற்குள் புதைத்த மனைவியை பொலிசார் கைது செய்துள்ளனர்.

Palghar என்ற கிராமத்தில் Sarita Bharti(37) என்ற பெண்மணி தனது வீட்டில் வைத்து பாலியல் தொழில் நடத்துவதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.

இந்த தகவலையடுத்து அப்பெண்ணின் வீட்டிற்கு சென்று பொலிசார் சோதனை நடத்தியதில், 4 பெண்கள் மீட்கப்பட்டனர், மேலும் இந்த சோதனையின் போது அதிர்ச்சி தகவல் ஒன்று பொலிசாருக்கு தெரியவந்தது.

இவரது கணவரை இவரே கொலை செய்தார் என்பதுதான். தனது கணவரை கொலை செய்த சரிதா, அவரை எரித்து தனது வீட்டுக்குள் புதைத்துள்ளார். அதனை பொலிசார் தோண்டிப்பார்த்ததில் எலும்புக்கூடுகள் சிக்கியுள்ளன.

தற்போது, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சரிதா மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்