ஜெயலலிதா மரணம்: அதிர்ச்சியை ஏற்படுத்திய மருத்துவரின் விளக்கம்

Report Print Deepthi Deepthi in இந்தியா
523Shares

உடல்நலக்குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்தபோது அவர் இட்லி சாப்பிட்டதாக கூறப்பட்ட தகவல் உண்மையா என்பது குறித்து மருத்துவர் பாலாஜி நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை செய்து வரும் நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் முன்பு டாக்டர் பாலாஜி ஆஜரானார்.

அவர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து விளக்கம் அளித்துள்ளார், அதில், ஜெயலலிதா ஆரம்பகட்டத்தில் இருந்தபோது நீராகராம் மட்டுமே எடுத்துக்கொண்டார், இட்லி போன்ற உணவுகளை அவர் சாப்பிடவில்லை என்று கூறியுள்ளார்.

மேலும், ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது திருப்பரங்குன்றம் உட்பட 3 தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் விண்ணப்பத்தில் அவர் கைரேகை வைத்தது குறித்தும் விளக்கம் அளித்துள்ளார்.

உயர் நீதிமன்றத்தில் ஆஜரானபோது,ஜெயலலிதா மயக்க நிலையில் இருந்ததாக தெரிவித்தவர், விசாரணை கமிஷன் முன்னிலையில் அவரைநேரில் பார்த்ததாகக் கூறியுள்ளார், 'அவருக்கு,நான் சிகிச்சை அளிக்கவில்லை, ஹைதராபாத்தைச் சேர்ந்த மருத்துவர்களும், எய்ம்ஸ் மருத்துவர்களும்தான்சிகிச்சை அளித்தனர்' என்று கூறியுள்ளார்.

ஜெயலலிதா மருத்துவமனையில் என்ன நிலையில் இருந்தார் என்பதில் முன்னுக்குப்பின் முரணான தகவல்களே வந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் டாக்டர் பாலாஜி அளித்துள்ள விளக்கம் மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்