ஆறு வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற இளைஞர்கள்: சிக்கியது எப்படி?

Report Print Raju Raju in இந்தியா

ஆறு வயது சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்து கொன்ற இருவரை ஊர்மக்கள் பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

தெலுங்கானா மாநிலத்தின் மெதக் மாவட்டத்தில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது.

அந்த பகுதியில் வசித்து வரும், பீகாரை சேர்ந்த கூலித்தொழிலாளி கலாம், ஹாசினி தம்பதிக்கு வாசிம் (7) என்ற மகனும், குஷ்பு (6) என்ற மகளும் உள்ளனர்.

இந்நிலையில் குஷ்பு மூன்று நாட்களுக்கு முன்னர் பள்ளிக்கு சென்று பின்னர் வீட்டிற்கு வராமல் மாயமாகியுள்ளார்.

சிறுமியை பல்வேறு பகுதியில் தேடிய போது ரவி என்பவர், குஷ்புவை அழைத்து சென்றதாக அவரின் சகோதரன் வாசிம் தெரிவித்துள்ளான்.

இதனையடுத்து ரவி மற்றும் அவரது நண்பர் ஒருவரை பிடித்து விசாரித்தபோது சிறுமி குஷ்புவை கடத்தி சென்று கற்பழித்து கொலை செய்துள்ளது தெரியவந்தது

இதை கேட்டு ஆத்திரமடைந்த பொது மக்கள் இருவருக்கும் தர்ம அடி கொடுத்து பின்னர் பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers