உயிரோடு எரித்து கொல்லப்பட்ட முஸ்லிம் நபர் செய்த தவறு என்ன?

Report Print Deepthi Deepthi in இந்தியா

மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த அஃப்ரசூல் ( 47) என்பவரை, ஒரு நபர் கோடாரியால் சரமாரியாக தாக்கி, அதன்பின் பெட்ரோலை ஊற்றி தீயிட்டு கொளுத்தி கொலை செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

அந்த வீடியோவில், “ஜிஹாதிகளே எங்கள் நாட்டிலிருந்து வெளியேறுங்கள். லவ் ஜிகாத்திலிருந்து ஒரு பெண்ணை காப்பாற்றவே இவனை கொலை செய்தேன்” என ஆக்ரோஷமாக கூறுகிறார்.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் முக்கிய குற்றவாளியான ஷம்புலால் ரேகர் மற்றும் 14 வயது சிறுவனையும் கைது செய்தனர்.

எங்கள் காலணியை சேர்ந்த பெண் ஒருவருடன் அவர் தொடர்புகொண்டிருந்தார். அப்பெண்ணை மீட்க நினைத்தேன். அதனால்தான் இவ்வாறு செய்தேன். அந்த பெண்ணை எனக்கு குழந்தை பருவத்திலிருந்தே தெரியும். அப்பெண்ணின் சகோதரருடன் தான் நான் படித்தேன் என விசாரணையில் ஷம்புலால் ரேகர் தெரிவித்துள்ளார்.

அஃப்ரசூல் தங்கியிந்த வீட்டின் உரிமையாளர் பண்டிட் கெம்ராஜ் பாலிவாலின் கண்கள் கண்ணீரில் மூழ்யிருக்கிறது. ரொம்ப நல்ல மனிதருக்கு இந்த மோசமான விஷயம் நடந்திருக்கக் கூடாது என கூறியுள்ளார்.

கூலி வேலை பார்ப்பதற்காக 12-13 வருடங்களுக்கு முன்பு மேற்கு வங்கத்தில் இருந்து ராஜச்மன்ட்டிற்கு வந்தவர் அஃப்ரசூல்.

இந்த 13 வருடத்தில் தொழிலாளரில் இருந்து ஒப்பந்ததாரராக உயர்ந்த அஃப்ரசூல், சாலைப் போடும் பணிகளைச் செய்ய தொடங்கினார்.

அஃப்ரசூலின் மரணக் காணொளியை பார்த்ததில் இருந்து, அவரது மருமகன் முஷாரப்பால் எதையும் சாப்பிட முடியவில்லை. அஃப்ரசூல் உடன் வசித்த தொழிலாளர்கள் ராஜஸ்தானில் வசிக்க முடியாமல் வேறு இடத்திற்குச் செல்கின்றனர்.

மேலும், அஃப்ரசூலுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பது என்று கூறப்படுவது முற்றிலும் தவறு. லவ் ஜிகாத் என்ற வார்த்தை எங்களுக்கு புதியது. அந்த கொலையாளிக்கு யாரையாவது கொல்ல வேண்டும். அந்த நேரத்தில் அஃப்ரசூல் மாட்டிக்கொண்டார். நான் சிக்கியிருந்தால் நானும் கொல்லப்பட்டிருப்பேன் என்று அஃப்ரசூலுடன் பணியாற்றிய பரக்கத் அலி தெரிவித்துள்ளார்.

மேலும், பொலிசார் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும், குற்றவாளிகளை தப்பிக்கவிடக்கூடாது என கூறியுள்ளார்.

வீடியோவை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும்

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers