பிறந்து 8 நாட்களே ஆன குழந்தையை கொன்ற தாய்: அதிர்ச்சி வாக்குமூலம்

Report Print Deepthi Deepthi in இந்தியா

கேரளாவில் தாய் ஒருவர் பிறந்து 8 நாட்களே ஆன குழந்தையை கொலை செய்துள்ள அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கண்டதின்கார பின்னு, சந்தியா தம்பதியினருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில் மீண்டும் கப்பம் தரித்த சந்தியாவுக்கு 8 நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்துள்ளது.

இந்நிலையில், குழந்தை அசைவற்ற இருப்பதாக கூறி, கண்டதின்கார பின்னு குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் கழுத்தில் கீறல்கள் இருந்ததை கண்டுபிடித்தனர். இதனையடுத்து மருத்துவர்கள் காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக பொலிசார் நடத்திய விசாரணையில், குழந்தை எனது நிறத்திலும், எனது கணவரின் சாயலிலும் இல்லாத காரணத்தால் குழந்தையின் கழுத்தை துணியால் சுற்றி கொலை செய்துள்ளதாக சந்தி வாக்குமூலம் அளித்துள்ளது பொலிசாரை அதிர்ச்சியடையவைத்துள்ளது.

இதனைத்தொடர்ந்து பொலிசார் சந்தியாவை கைது செய்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers