இரண்டு மகள்களை தொடர்ந்து பலாத்காரம் செய்த தந்தை மற்றும் தாத்தா

Report Print Raju Raju in இந்தியா

இரண்டு சிறுமிகளை அவர்களின் தந்தையும், தாத்தாவும் தொடர்ந்து பலாத்காரம் செய்தும், பாலியல் துன்புறுத்தல் கொடுத்தும் வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தின் பருக்காபாத் நகரில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது. 14 மற்றும் 11 வயதான இரண்டு சிறுமிகளின் தாய் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துவிட்டார்.

பின்னர் தங்களது தாய் வழி பாட்டி வீட்டில் சில காலம் சிறுமிகள் வசித்து வந்தனர். ஆனால் பாட்டிக்கு பண கஷ்டம் இருந்ததால் இருவரும் தனது தந்தை வீட்டுக்கு வந்துள்ளனர்.

அங்கு அவர்களின் தாத்தாவும் உடன் தங்கியிருந்தார்.

இந்நிலையில் கடந்த எட்டு மாதங்களாக 14 வயது சிறுமியை அவர் தந்தை மிரட்டி பலாத்காரம் செய்துவந்துள்ளார்.

இது தொடர்பாக சிறுமி தனது பாட்டியிடம் கூறிய நிலையில் விடயம் ஊர் பஞ்சாயத்துக்கு போனது, அங்கு தந்தை மன்னிப்பு கேட்ட நிலையில் பின்னரும் அதே செயலை செய்து வந்துள்ளார்.

அதே நேரத்தில் 11 வயது சிறுமிக்கு அவரின் தாத்தா பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதையடுத்து தற்போது இரண்டு சிறுமிகளும் தைரியமாக பொலிசில் புகார் கொடுத்துள்ளனர்.

புகாரின் பேரில் தாத்தாவை பொலிசார் கைது செய்துள்ள நிலையில் தலைமறைவாக உள்ள அப்பாவை தேடி வருகிறார்கள்.

இதனிடையில், இருவரும் வாழ்நாள் முழுவதும் சிறையிலேயே இருக்கும்படி தண்டனை தர சிறுமிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்