மகள் வயது சிறுமியுடன் திருமணம்! ஆசை வார்த்தை பேசி மயக்கியது அம்பலம்

Report Print Kabilan in இந்தியா
1794Shares
1794Shares
lankasrimarket.com

பீகாரில் மிஸ்டு கால் மூலமாக அறிமுகமான நபரின் கடத்தல் முயற்சியில் இருந்து, பள்ளி மாணவி தப்பித்த சம்பவம் பரபரப்பாகியுள்ளது.

Mokama நகரைச் சேர்ந்தவர் சந்தீப் குமார், 42 வயதான இவர், கடந்த 1ஆம் திகதி அன்று, பீகாரைச் சேர்ந்த 16 வயதான பள்ளி மாணவின் கைப்பேசிக்கு, பலமுறை மிஸ்டு கால் செய்துள்ளார்.

பின்னர், அந்த எண்ணை தொடர்பு கொண்டு பேசிய மாணவியிடம், நட்பாக பேசியுள்ளார் சந்தீப். அதன்பின், இருவரும் ஒரு வாரமாக மணிக்கணக்கில் கைப்பேசியில் பேசியுள்ளனர்.

இந்நிலையில், சந்தீப் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மாணவியிடம் கூறியுள்ளார். ஆனால், அந்த மாணவியோ நேரில் சந்திக்காத நபரை எப்படி திருமணம் செய்து கொள்வது என கேட்டுள்ளார்.

அதற்கு சந்தீப், தனக்கு 20 வயது என்றும், தான் பார்ப்பதற்கு அழகாக இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும், தன்னை திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வதாகவும் மிரட்டியுள்ளார்.

இதனால் பயந்து போன அந்த மாணவி, சந்தீப்பை திருமணம் செய்து கொள்ள சம்மதித்ததோடு, இருவரும் நேரில் சந்திக்கவும் முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், மாணவி பயிற்சி வகுப்புக்கு சென்று வருவதாக வீட்டில் கூறிவிட்டு, சந்தீப்பை ரயில் நிலையம் ஒன்றில் சந்தித்துள்ளார்.

ஆனால், சந்தீப்பை பார்த்த மாணவி அதிர்ச்சியடைந்தார். தன் தந்தை வயது நபரை திருமணம் செய்து கொள்ள முடியாது என கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த சந்தீப், கொலை செய்து விடுவதாக மிரட்டி, அந்த மாணவியின் கையைப் பிடித்து இழுத்தவாறு ரயிலில் ஏறியுள்ளார்.

அவரின் கட்டுப்பாட்டில் இருந்த மாணவி, குளியலறைக்கு சென்றுவர அனுமதி கோரி, தனது சகோதரிக்கு Call செய்து தன் நிலையைக் கூறி உதவி கேட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, ரயில் Bhagalpur நிலையத்தினை அடைந்தபோது, அங்கு காத்திருந்த ரயில்வே பொலிசார் சந்தீப்பை கைது செய்து, மாணவியை மீட்டுள்ளனர். பின்னர் சந்தீப்பை நகர பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்