மனிதரை வேட்டையாடிய சிறுத்தை: சரணாலயத்தில் பரிதாபம்

Report Print Harishan in இந்தியா

இந்தியாவின் ரிஷிகேஷில் நபர் ஒருவரை சிறுத்தை வேட்டையாடியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரிஷிகேஷில் உள்ள ராஜாஜி புலிகள் சரணாலயத்தில் சிறுத்தை ஒன்றினால் கடித்துக் குதறப்பட்ட நிலையில் உடல் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது.

முதற்கட்ட தகவலின் படி அந்த நபரின் வயது 35 ஆக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குறித்த நபர் தொடர்பான முழு தகவலும் கிடைத்த பிறகே தெரிவிக்க முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் இது குறித்து பேசிய சரணாலய இயக்குநர் சனாதன் சங்கர், இறந்த நபர் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் மனிதனை உணவாக உட்கொள்ளும் சிறுத்தை மூலம் அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் கூறியுள்ளார்.

அந்த சிறுத்தையை தேடும் பணி தீவிரமாக நடந்து வருவதாகவும் கூறினார்.

தற்போது இறந்துள்ள நபர் கடந்த மூன்று ஆண்டுகளில் சிறுத்தைக்கு இரையான 15-வது நபர் என புலிகள் சரணாலய அதிகாரி ஒருவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.


மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers