ஜெயலலிதா வீடியோவை வெளியிட்டவர் மீது வழக்குபதிவு

Report Print Fathima Fathima in இந்தியா

ஜெயலலிதா அப்பல்லோவில் சிகிச்சை பெறும் வீடியோவை வெளியிட்ட வெற்றிவேல் மீது வழக்குபதிவு செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

ஜெயலலிதா கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 22ம் திகதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் டிசம்பர் 5ம் திகதி மரணமடைந்தார்.

அவரது மரணத்தில் சந்தேகம் எழுந்த நிலையில், ஒரு வருடம் கழித்து தற்போது வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு விசாரணையும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் டிடிவி தினகரன் ஆதரவாளரான வெற்றிவேல் இன்று பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் வீடியோவை வெளியிட்டார்.

ஆர்.கே.நகர் தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில் இந்த வீடியோ தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரிகிறது.

இதனை தொடர்ந்து தேர்தல் நேரத்தில் மக்கள் மனதை பாதிக்கும் வீடியோவை வெளியிட்ட வெற்றிவேல் மீது 126 (1பி) பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்ய தேர்தல் அதிகாரி பிரவீன் நாயருக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆர்கே நகருக்கு நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஜெயலலிதா வீடியோவை ஒளிபரப்புவது ஆர்கே நகர் தேர்தல் நடத்தை விதிகளுக்கு மாறானது.

மக்களின் மனதை பாதிக்கும் ஜெயலலிதா சிகிச்சை வீடியோ ஒளிபரப்புவதை நிறுத்துங்கள். நேரடியாகவோ மறைமுகமாகவோ தேர்தலில் தாக்கம் ஏற்படுத்தும் வீடியோவை வெளியிட வேண்டாம் என்று தேர்தல் அதிகாரி பிரவீன் நாயர் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்