ஜெயலலிதா சிகிச்சை வீடியோ: அப்பல்லோ நிர்வாகம் விளக்கம்

Report Print Harishan in இந்தியா

அப்பல்லோ மருத்துவமனையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சிகிச்சை பெற்றுவந்த வீடியோ காட்சிகள் தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

2016-ஆம் ஆண்டு செப்டம்பர் 22-ஆம் திகதி அன்றைய தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா உடல்நலக் குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அதன்பின் தொடர்ந்து 75 நாட்கள் மருத்துவமனையில் இருந்த அவரின் புகைப்படங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

இதனால் தொடர்ந்து பல வதந்திகள் பரவி வந்த நிலையில், அவர் ஜூஸ் அருந்துவது போன்ற 20 நொடி வீடியோ காட்சி ஒன்றை தினகரன் ஆதரவாளரான வெற்றிவேல் இன்று வெளியிட்டார்.

தமிழகத்தில் அதிர்வளைகளை ஏற்படுத்திய அந்த வீடியோவின் நம்பகத்தன்மை குறித்த கேளிவியும் எழுந்தது.

இந்நிலையில் அப்பல்லோ நிரவாகம் சார்பாக வெளியிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், அந்த வீடியோவை நாங்கள் எடுக்கவில்லை.

மேலும் அந்த வீடியோ ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது எடுக்கப்பட்ட வீடியோ தான் என்றும், ஜெயலலிதாவிற்கு நெருக்கமானவர்கள் அந்த வீடியோவை எடுத்திருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers