கொலைக்காரின்னு சொன்னாங்களே!... வீடியோ எடுக்கப்பட்டது எப்போது? ரகசியம் வெளியானது

Report Print Fathima Fathima in இந்தியா

தினகரனை நம்பிக் கொடுத்த வீடியோவை இப்படி பொதுவெளியில் வெளியிட்டு ஏமாற்றி விட்டாரே என்ற சோகத்தில் இருக்கிறாராம் கிருஷ்ணபிரியா.

ஜெயலலிதா அப்பல்லோவில் சிகிச்சை பெறும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணபிரியா அளித்துள்ள பேட்டியில், ஜெயலலிதா வீடியோவை விசாரணை கமிஷனிடம் சசிகலா தான் கொடுக்க சொன்னார்.

வெற்றிவேல் நம்பிக்கை துரோகம் செய்துவிட்டார், சசிகலா மீது அபாண்டமாக குற்றச்சாட்டு வைத்த போது இதனை வெளியிட்டிருக்கலாம்.

சசிகலாவை நினைத்தால் தான் மனது கஷ்டமாக இருக்கிறது, அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டு ஒருசில மாதங்கள் கழிந்த பின்னரே வீடியோ எடுக்கப்பட்டது என தெரிவித்துள்ளார்.

மேலும் நம்பி கொடுத்த வீடியோவை இப்படி ஏமாற்றி வெளியிட்டு விட்டார்களே? எந்தத் தொண்டனுக்கும் இப்படியொரு கோலத்தில் அம்மா இருப்பதை ஏற்றுக் கொள்ளவே முடியாது.

என்னாலேயே ஒருமுறைக்கு மேல் பார்க்க முடியவில்லை. தேர்தல் வெற்றிக்காக இப்படியெல்லாம் செய்யலாமா? என கதறி அழுததாக தகவல்கள் வெளியானது.

மேலும் தினகரனிடம் போன் செய்து பேசிய போது, விசாரணை கமிஷனில் கொடுக்க வேண்டும் என்பதில் நானும் உறுதியாக இருந்தேன், என் அனுமதி இல்லாமல் வெளியிட்டுள்ளார்கள் என அவர் சமாதானம் செய்துள்ளதாக தகவல்கள் கசிகின்றன.

தினகரனுக்கும் இளவரசி குடும்பத்துக்கும் இடையிலான விரிசல் அதிகரித்துக் கொண்டே செல்வது இதன் மூலம் உறுதியாகியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers