ஜெ. வீடியோ உண்மையா? வீடியோ எடிட்டர் ஒருவர் வெளியிட்ட பகீர் தகவல்

Report Print Arbin Arbin in இந்தியா

ஜெயலலிதா சிகிச்சை தொடர்பாக தினகரன் ஆதரவாளர்கள் வெளியிட்ட வீடியோவின் நம்பகத்தன்மை குறித்து தொழில்முறை வீடியோ எடிட்டர் ஒருவர் பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.

ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெறும் வீடியோ என்று கூறி, தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் ஒரு வீடியோவை இன்று வெளியிட்டார்.

அந்த 20 வினாடி வீடியோவில், ஜெயலலிதா ஜூஸ் குடித்தபடி, டிவி பார்ப்பதை போன்ற காட்சிகள் உள்ளன. இந்த வீடியோ போலியானது, அது பொம்மை என்று ஜெயலலிதா தோழி, கீதா தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் பிரபல வீடியோ எடிட்டர் ஒருவர் இந்த வீடியோவின் நம்பகத்தன்மை குறித்து சில தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

அதில் அவர், வீடியோவில் உள்ளது ஜெயலலிதாவின் உருவம் அல்ல, என்று கூறுவதற்கு போதிய ஆதாரம் இல்லை.

அது பொம்மை எனக்கூறுவதையும் ஏற்க முடியவில்லை. கை பகுதியை உற்று நோக்கி ஆய்வு செய்தபோது அது பொம்மை அல்ல என்று தெரிகிறது.

ஜெயலலிதாவின் கால்கள் அசைவற்று இருப்பதை போல வீடியோவில் காட்டப்படுகிறது. ஆனால், அவரது இடது கால் பாதத்தில் ரேகை உள்ளது உன்னிப்பாக பார்த்தால் தெரிகிறது. எனவே சந்தேகப்பட வேண்டாம் என்றார்.

மட்டுமின்றி ஜெயலலிதா அவசர சிகிச்சையில் இருந்தபோது அப்பல்லோ மருத்துவமனையின் 2வது மாடியில் இருந்தார். ஆனால் வீடியோவில், ஜன்னலுக்கு வெளியே மரங்கள் தெரிகின்றன.

இதுதான் சற்று சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ஒருவேளை வார்டுக்கு வந்த பிறகு எடுத்த வீடியோவாக இருந்திருப்பின், அந்த சந்தேகம் தேவையில்லை என்றார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers