251 ஜோடிகளுக்கு ஒரே மேடையில் திருமணம்: அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த வைர வியாபாரி

Report Print Santhan in இந்தியா

இந்தியாவில் வைர வியாபாரி ஒருவர் தந்தையால் கைவிடப்பட்ட 251 பெண்களுக்கு தன் சொந்த செலவில் திருமணம் செய்து வைத்துள்ளார்.

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர் Mahesh Savani. வைர வியாபாரியான இவர் கடந்த 2012ம் ஆண்டு முதல் தந்தையால் கைவிடப்பட்ட பெண்களுக்கு தன்னுடைய சொந்த செலவில் திருமணம் செய்து வைத்து வருகிறார்.

இந்த திருமணத்தை இவர் இந்து முறைப்படி Kanyadaan முறையில் செய்து வைத்து வருகிறார்.

கடந்த ஆண்டு 236 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்த இவர், அவர்களுக்கு திருமண பரிசாக 5 லட்சம் ரூபாய், சோபா மற்றும் இதர பொருட்கள் எல்லாம் கொடுத்து அவர்கள் வாழ்க்கை சிறப்பாக இருக்க வேண்டும் என்று வாழ்த்தினார்.

அந்த வகையில் இந்தாண்டிற்கான திருமணத்தை Mahesh Savani சூரத்தில் மிகப் பிரம்மாண்டமாக, இந்தியாவையே திரும்பி பார்க்க வைக்கும் அளவிற்கு 251 ஜோடிகளுக்கு கோலாகலமாக திருமணம் செய்து வைத்துள்ளார்.

இதில் 5 இஸ்லாமிய ஜோடிகள் மற்றும் கிறிஸ்டியன் ஜோடிகள் இருந்ததாகவும், அதுமட்டுமின்றி எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட இரண்டு பெண்களும் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த திருமணம் ஆண்டு தோறும் கிறிஸ்துமஸ் தினத்தின் போது நடைபெற்று வருவதாகவும், திருமண ஜோடிகள் தங்கள் உடல் முழுவதும் வண்ணமயமான ஆபரணங்களை அணிந்து கொண்டு மிகுந்த மகிழ்ச்சியுடன் இந்த திருமணத்தை ஏற்றுக் கொண்டுள்ளனர்.

சென்ற ஆண்டு போன்று இந்த ஆண்டும் இந்திய மதிப்பில் ஒவ்வொருவருக்கும் 5 லட்சம் ரூபாய் பரிசாக தரப்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Mahesh Savani இந்த திருமணத்தை செய்து வைப்பதற்கு முக்கிய காரணம் கடந்த 2008ம் ஆண்டு அவரது ஊழியர் ஒருவர், தனது மகள் திருமணத்திற்கு சில நாட்களுக்கு முன்னர் இறந்துவிட்டதாகவும், இதைக் கண்ட அவர் அதன் பின் இது தொடர்பாக தொண்டு நிறுவனத்தை நிறுவியதாக கூறப்படுகிறது.

இது குறித்து Mahesh Savani கூறுகையில், இதை நான் ஒரு தந்தை பொறுப்பில் இருந்து எடுத்துக் கொள்கிறேன், ஒரு தந்தை என்ன எல்லாம் செய்ய முடியுமோ அதை தான் செய்ய முயற்சி செய்கிறேன், இந்தியாவில் ஒரு மகள் தனது தந்தையை இழந்துவிட்டால், அவளது திருமணம் என்பது கேள்வி குறியாகிறது, அதற்காக குடும்பத்தினர் பெரிதும் கஷ்டப்படுகின்றனர், இதை நான் தொடர்ந்து செய்வேன் என்று கூறியுள்ளார்.

இந்த திருமணத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு திருமண ஜோடிகளை வாழ்த்தினர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்