காதல் திருமணம் செய்து கொண்ட அண்ணன்- தங்கை: நடந்த விபரீத சம்பவம்

Report Print Deepthi Deepthi in இந்தியா

மைசூரை சேர்ந்த ரசிகா என்பவர் தனது பெரியம்மாவின் மகளான காவியாவை காதலித்து வந்துள்ளார்.

அண்ணன்- தங்கை உறவு என்பதை மறந்து இருவரும் காதல் வயப்பட்டனர். இந்த விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரியவந்ததையடுத்து, அண்ணன் தங்கையான நீங்கள் இதுபோன்று செய்யக்கூடாது என எச்சரித்துள்ளனர்.

ஆனால், காதல் ஜோடி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வீட்டைவிட்டு வெளியேறி கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். பின்னர் அவர்கள் நஞ்சன்கூடு டவுனில் உள்ள ஒரு வாடகை வீட்டில் குடும்பம் நடத்தி வந்தனர்.

இதற்கிடையே கடந்த சில நாட்களாக கணவன், மனைவி இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று காலையிலும் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனம் உடைந்த ரசிகா, வீட்டில் உள்ள ஒரு அறைக்கு சென்று உள்புறமாக தாளிட்டுக்கொண்டு, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தற்போது இதுகுறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்