டிடிவி தினகரனுக்கு உறுதுணையாக இருப்பேன்: விஷால் திட்டவட்டம்

Report Print Raju Raju in இந்தியா

ஆர்.கே நகரில் மக்கள் நல பணிகளை டிடிவி தினகரன் நிறைவேற்ற அவருக்கு உறுதுணையாக இருப்பேன் என நடிகர் விஷால் கூறியுள்ளார்.

சென்னை ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளார்.

இந்நிலையில் பிரபல நடிகர் விஷால் தினகரனுக்கு டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அந்த பதிவில், ஆர்.கே நகரில் வெற்றி பெற்ற தினகரனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

தொகுதியின் எழில் நகரில் குடிநீர், சாக்கடை உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகள் இன்னும் பூர்த்தி செய்யப்படவில்லை, மார்க்கெட்டில் குடிநீர் மற்றும் கழிவறை வசதிகள் இல்லாமல் பெண்கள் அவதிப்படுகின்றனர்.

தினகரன் இவற்றையெல்லாம் நிறைவேற்றுவார் என நம்புகிறேன், இந்த பணிகளை அவர் நிறைவேற்ற நானும் அவருக்கு உறுதுணையாக இருப்பேன் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்