ஜெயலலிதாவை கொச்சையாக திட்டிய நபர்: பேஸ்புக்கில் வைரலாகும் பதிவு

Report Print Kabilan in இந்தியா

பொதுவாழ்வில் ஈடுபடும் பெண்கள் இழிவுபடுத்தப்படுகிறார்கள், இந்த மாதிரியான ஜந்துக்களை மக்கள் முன் அடையாளம் காட்டி சட்டப்படி தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்று இளவரசியின் மகள் கிருஷ்ணப்பிரியா தெரிவித்துள்ளார்.

இளவரசியின் மகளும், சசிகலாவின் அண்ணன் மகளுமான கிருஷ்ணப்ரியா அண்மைக் காலமாக பேஸ்புக் மற்றும் பொது மேடைகளிலும் தன்னுடைய கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்.

இந்நிலையில், ஜெயலலிதா மற்றும் சசிகலா குறித்து பேஸ்புக்கில் நபர் ஒருவர், இழிவாக கருத்தை பதிவிட்டுள்ளார்.

அந்த நபரின் பதிவையும், புகைப்படத்தையும் சுட்டிக் காட்டிய கிருஷ்ணப்ரியா, அவரைத் திட்டித் தீர்த்துள்ளார்.

அவர் தன் பேஸ்புக் பதிவில், இவர் யார் என்று எமக்கு தெரியாது. ஆனால், பொதுவாழ்வில் ஈடுபடும் பெண்கள் எவ்வாறு இழிவுப்படுத்தப்படுகிறார்கள் என்பதற்கு இப்பதிவு ஒரு சான்று.

பெண்கள் தயக்கம் களைந்து இம்மாதிரியான ஜந்துக்களை மக்கள் முன் அடையாளம் காட்டி, சட்டப்படி தண்டனை பெற்றுத்தர முன்வர வேண்டும், விடுவதாக இல்லை நான், நமக்காக நாம் முன்வர வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் சைபர் கிரைம் பொலிசில் புகார் அளிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கிருஷ்ணப்ரியாவின் இந்த கருத்துக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அதனுடன் தாங்களே அந்த நபரை பிடித்துத் தருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்