20 ரூபாய் நோட்டுகளுடன் காத்திருக்கும் ஆர்.கே.நகர் மக்கள்

Report Print Harishan in இந்தியா

ஆர்.கே நகர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளரிடம் பெற்ற 20 ரூபாய் டோக்கனுடன் வாக்காளர்கள் காத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆர்.கே நகர் தொகுதியில் 40,707 வாக்குகள் வித்தியாசத்தில் ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சிகளை வீழ்த்தி வெற்றி வாகை சூடியுள்ளார் சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன்.

சுயேட்சை வேட்பாளரான அவர், தேர்தல் முடிந்தவுடன் 20 ரூபாய் டோக்கனுக்கு 1000 ரூபாய் வரை வழங்குவதாக உத்தரவாதம் வழங்கியதாக கூறப்பட்டது.

அந்த வாக்குறுதியை நம்பிய வாக்காளர்கள் பெரும் ஆர்வத்துடன் வாக்களித்ததாகவும், ஓரிரு நாட்களில் பணம் வந்துவிடும் என நம்பி காத்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதுமட்டுமின்றி டிடிவி தினகரன் ஆர்.கே.நகர் தொகுதியை சிங்கப்பூராக மாற்றலாம் எனவும் பேசப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...