நோட்டாவிடம் தோற்ற பாஜக: ட்விட்டரில் கிண்டலடித்த குஜராத் இளம் எம்.எல்.ஏ

Report Print Harishan in இந்தியா

ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் நோட்டாவை விட குறைவான வாக்குகளை பெற்ற பாஜக-வை ட்விட்டரில் கிண்டலடித்துள்ளார் குஜராத் சுயேட்சை எம்.எல்.ஏ. ஜிக்னேஷ் மேவானி.

குஜராத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக-வை எதிர்த்து சுயேட்சையாக போட்டியிட்டு பெரும் வெற்றியை பெற்றவர் ஜிக்னேஷ் மேவானி.

இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ள பதிவில், உலகின் மிகப்பெரிய மிஸ்டுகால் கட்சியான பாஜக, 50 லட்சம் மிஸ்டுகால்கள் தமிழகத்தில் இருந்து வந்ததாக கூறியது.

ஆனால் தமிழகத்தில் நடைபெற்ற ஒரு சாதாரண இடைத்தேர்தலில் கூட நோட்டவிற்கு பதிவான 2373 வாக்குகளை விட குறைவாக 1417 வாக்குகள் தான் பெற்றுள்ளது.

இந்த சிறப்பான ஊத்தாப்பத்தை பாஜகவினர் ஜீரணித்து கொள்வார்கள் என நம்புவதாக பதிவிட்டுள்ளார்.

அவரின் இந்த கிண்டல் ட்விட், சமூகவலைதளங்களில் தற்போது வைரலாகியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்