கிருஷ்ணபிரியாவுக்கு வளைகாப்பு போட்ட ஜெயலலிதா: வெளியான புகைப்படங்கள்

Report Print Kabilan in இந்தியா

இளவரசியின் மகள் கிருஷ்ணப்ரியா, தனது பேஸ்புக் பக்கத்தில், தன்னுடைய வளைகாப்பு நிகழ்ச்சியில் ஜெயலலிதா கலந்து கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

சில தினங்களுக்கு முன்னர், ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெறும் வீடியோ வெளியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு தினகரன் தான் காரணம் என்று எழுந்த கருத்துக்கு, அவர் மறுப்பு தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, இளவரசியின் மகள் கிருஷ்ணப்ரியா தனது கண்டனத்தை பேஸ்புக் மூலமாக தெரிவித்தார். இதன் காரணமாக கிருஷ்ணப்ரியா மற்றும் தினகரனுக்கு இடையே விரிசல் அதிகமானதாக கூறப்பட்டது.

மேலும், அடுத்த ஆண்டு தான் அரசியலுக்கு வரப்போவதாகவும் அறிவித்த கிருஷ்ணப்ரியா, தற்போது தனது பேஸ்புக் பக்கத்தில், ஜெயலலிதா கலந்து கொண்ட வளைகாப்பு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

இது குறித்து அந்த பதிவில் கிருஷ்ணப்ரியா கூறுகையில், ‘இப்புகைப்படங்கள், 2005ஆம் ஆண்டு, ஜெயலலிதா அவர்கள் போயஸ் இல்லத்தில், எனது வளைகாப்பு நடைபெற்றபோது எடுக்கப்பட்டவை ஆகும்.

சில நினைவுகள் நம் மரணம் வரை கூடவே பயணிக்கும். அவற்றுள் இதுவும் ஒன்று. எங்களது மூன்று அன்னைகளில் ஒருவரை நாங்கள் இழந்துவிட்டோம் என்ற உண்மையை, இன்னமும் எங்கள் மனம் நம்ப மறுக்கிறது’ என தெரிவித்துள்ளார்.

மேலும், வளைப்பூட்டும்போது ஜெயலலிதா பாடல் ஒன்றை பாடியதாகவும், அது தற்போது அவருக்கு ஒலித்துக் கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்