திமுகவினர் விலை போனதாக சொல்வதா? தயாநிதி அழகிரி கேள்வி

Report Print Deepthi Deepthi in இந்தியா

ஆர்.கே.நகரில் திமுக படுதோல்வியை சந்தித்து டெபாசிட் இழந்தது.

இது பற்றிய கேள்விக்கு பதிலளித்த திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன் பணநாயகம் வென்றிருக்கிறது ஜனநாயகம் தோற்றிருக்கிறது என்று கூறினார்.

திமுக கடந்த முறை வாக்குகள் கூட அதிகம் வரவில்லையே, திமுகவினர் வோட்டு போடவில்லை என்று அர்த்தமா என்ற செய்தியாளரின் கேள்விக்கு அதையும் பணம் சாப்பிட்டு விட்டது என்று பதிலளித்திருந்தார்.

இந்த பேட்டியின் லிங்கை தனது ட்விட்டர் பக்கத்தில் எடுத்து பதிவு செய்துள்ள மு.க. அழகிரியின் மகன் துரைதயாநிதி தி.மு.க வினரே காசுக்கு விலை போனதாக, தி.மு.க வின் முதன்மைச்செயலாளர் துரைமுருகன் கூறியது தி.மு.வின் அடிமட்ட தொண்டர்களின் உணர்வுகள் மற்றும் மனதை புண்படுத்துவது போல் உள்ளது.

தலைமை என்ன செய்ய போகிறது என்ற கேள்விகளுடன் தி.மு.க தொண்டர்கள். முருகனுக்கு அரோகரா என்று விமர்சனம் செய்துள்ளது வைரலாகி வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்