பள்ளி மாணவி சொன்ன வார்த்தை: கனவு நிறைவேற அரசு காரில் அமர வைத்த கலெக்டர்

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தின் பள்ளி மாணவியின் கனவு நிறைவேற அவரை காரில் உட்கார வைத்து கலெக்டர் புகைப்படம் எடுத்துக் கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

திருவண்ணாமலையில் உள்ள அரசு பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவியருக்கு கலெக்டர் கந்தசாமி ஊக்கத் தொகை மற்றும் பரிசுகளை வழங்கினார்.

அப்போது பிளஸ் 1 படிக்கும் மாணவி மோனிஷா, கடந்த, 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில், 491 மதிப்பெண் பெற்றதால், அவருக்கு ஊக்கத்தொகை மற்றும் பரிசை கலெக்டர் வழங்கி பாராட்டிய போது, நானும் உங்களைப் போன்று கலெக்டர் ஆக வேண்டும் என்பது தான் என்னுடைய கனவு என்று கூறியுள்ளார்.

இதை மனதில் வைத்திருந்த கலெக்டர் பரிசளிப்பு விழா முடிந்தவுடன், குறித்த மாணவியை அழைத்து தன் சைரன் பொருத்திய அரசு காரில், தான் இருக்கும் இடத்தில் மாணவியை உட்கார வைத்து உடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

அதன் பின் அவர் இந்த புகைப்படத்தை பார்க்கும் போது என்னைப் போன்று நீயும் கலெக்டர் ஆக வேண்டும் என்ற எண்ணம் வர வேண்டும், அதுமட்டுமின்றி நானும் அரசுப் பள்ளியில் படித்து தான் இன்று கலெக்டராக மாறிதாக மாணவியிடம் கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers