சுப்பிரமணிய சுவாமிக்கு நன்றி தெரிவித்த தினகரன்!

Report Print Fathima Fathima in இந்தியா

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரன் 40707 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி அடைந்தார்.

இவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக, நாம்தமிழர், பாஜக கட்சிகள் டெபாசிட்டை இழந்தனர்.

வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுக் கொண்டிருந்த போதே, பாஜக மூத்த தலைவரான சுப்பிரமணிய சுவாமி, தினகரன் வெற்றி பெறுவார் என்றும், 2019ம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலை தினகரன் தலைமையிலான அதிமுக எதிர்கொள்ளும் எனவும் தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளித்த டிடிவி தினகரன், உங்களது வார்த்தைகளுக்கு நன்றி என பதிவிட்டார், இதற்கு சுவாமி அளித்த ரிப்ளை பரபரப்பை அதிகப்படுத்தியது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers