ஆர்கே நகர் தேர்தலில் நடைபெற்ற 5 முக்கிய சுவாரசியங்கள்

Report Print Deepthi Deepthi in இந்தியா

ஆர்கே நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரன் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

தேர்தலில் நடைபெற்ற 5 முக்கிய சுவாரசியங்கள் இதோ,

ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் ஜெயலலிதாவைவிட கூடுதல் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கிறார் தினகரன்.

2016-ம் ஆண்டு பொது தேர்தலில் ஆர்.கே நகர் தொகுதியில் போட்டியிட்ட ஜெயலலிதா 97,218 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

இரண்டாவது இடத்தை 57,673 வாக்குகள் பெற்று தி.மு.க வேட்பாளர் சிம்லா முத்துச்சோழன் பிடித்தார். இருவருக்குமான வாக்கு வித்தியாசம் 39545.

இந்த இடைத்தேர்தலில் வாக்கு வித்தியாசம் 40707. அதாவது சுயேச்சை வேட்பாளர் டி.டி.வி தினகரன் பெற்ற வாக்குகள் 89013, இரண்டாவது இடத்தைப் பிடித்த அதிமுக வேட்பாளர் மதுசூதனன் பெற்ற வாக்குகள் 48306.

இந்த தேர்தலில் ஒரே ஒரு தபால் வாக்குதான் பதிவானது. அந்த வாக்கைப் பெற்றவர் திமுக வேட்பாளர் மருது கணேஷ்.

இத்தேர்தலில் பா.ஜ.க நோட்டாவைவிட குறைந்த வாக்குகளே பெற்றது. நோட்டா பெற்ற வாக்குகள் 2373. பா.ஜ.க பெற்ற வாக்குகள் 1417.

11 ஆண்டுகளுக்குப் பின் சுயேச்சை வேட்பாளர் தமிழ் நாட்டில் வெற்றி பெற்று உள்ளார். 2006-ம் ஆண்டு தளி சட்டமன்ற தொகுதியில் ராமச்சந்திரன் சுயேச்சையாக நின்று வெற்றி பெற்றார். அதற்கு பின் இந்த இடைத் தேர்தலில் தினகரன் வெற்றி பெற்றுள்ளார்.

இந்த இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் மருது கணேஷ் (24,651 வாக்கு) உட்பட 57 வேட்பாளர்கள் வைப்புத் தொகையை இழந்தனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers