3 மாநிலங்களை அதிர வைத்த பாலியல் தொழில்: 16 வயது சிறுமியின் வாக்குமூலம்

Report Print Fathima Fathima in இந்தியா
1223Shares

இந்தியாவின் டெல்லி, உத்திரபிரதேசம், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் பாலியல் தொழில் செய்து புகழ்பெற்றவர் சோனு பஞ்சபான்.

இவரை கடந்த 2011ம் ஆண்டு பொலிஸ் அதிகாரிகள் கைது செய்தும், சாட்சி ஏதும் இல்லாததால் விடுவிக்கப்பட்டார்.

2012ம் ஆண்டு 16 வயது சிறுமி தைரியமாக வாக்குமூலம் அளிக்க முன்வந்தார், தான் சோனு பஞ்சபான்னிடம் சிக்கியது குறித்தும் பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்டது குறித்தும் தெரிவித்தார்.

ஆனால் சிறுமியின் வாக்குமூலம் வெளியாகும் முன்பே தலைமறைவானார், இதனையடுத்து சிறுமியை பற்றி பொலிசார் விசாரிக்க தொடங்கியதில் 2009ம் ஆண்டு காணாமல் போனவர் என்பதும், 11 பேரிடம் கைமாறி கடைசியாக சோனு பஞ்சபானிடம் வந்து சேர்ந்ததும் தெரியவந்தது.

மேலும் சோனுக்கு பயந்தே தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்ததும் தெரியவந்தது, இந்நிலையில் ஒருவழியாக சிறுமியை கண்டுபிடித்த பொலிசார், சோனு பஞ்சபானை கைது செய்துள்ளனர்.

இவருக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் இருப்பதுடன் குற்றத்தையும் ஒப்புக் கொண்டதாக தெரிகிறது, இதன்மூலம் மூன்று மாநிலங்களிலும் பாலியல் தொழில் தடுத்து நிறுத்தப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்