தற்கொலை செய்து கொண்ட விஜய்க்கு வேறு பெண்ணுடன் தொடர்பு: மனைவி பரபரப்பு தகவல்

Report Print Fathima Fathima in இந்தியா
458Shares

பிரபல தெலுங்கு நகைச்சுவை நடிகர் விஜய் சாய் தற்கொலை செய்து கொண்ட விடயத்தில் புதிய தகவல்கள் வெளிவந்துள்ளன.

தெலுங்கு சினிமாவில் பிரபலமான நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் விஜய் சாய், இவர் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக செல்பி வீடியோ எடுத்திருந்தார், அதில் தன்னுடைய மரணத்திற்கு மனைவி வனிதா, வழக்கறிஞர் சீனிவாஸ், இயக்குனர் சசிதர் காரணம் என குறிப்பிட்டிருந்தார்.

இதுதொடர்பாக வழக்குபதிவு செய்திருந்த பொலிசார், மூவரிடமும் விசாரணை நடத்தி வந்தனர், விஜய் சாயின் பெற்றோரும் தன் மகன் இறப்புக்கு வனிதாவே காரணம் என குற்றம்சாட்டினர்.

இதற்கிடையே கடந்த 16ம் திகதி வனிதா, விஜய் சாய் மற்றொரு பெண்ணுக்கு முத்தம் கொடுத்து கொண்டிருப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டார்.

மேலும் கூறுகையில், நாங்கள் மூன்று ஆண்டுகளாக பிரிந்து வாழ்கிறோம், அவருடைய மரணத்திற்கு நான் காரணமில்லை, என் மீதான குற்றச்சாட்டுகளுக்கு என்னிடம் பதில் இருக்கிறது, விரைவில் பொது வெளியில் அதை தெரிவிப்பேன், இதிலிருந்து தப்பிக்க நான் முயலவில்லை.

என்னிடம் அதிகளவில் ஆதாரங்கள் உள்ளன, புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சேகரித்து வருகிறேன், விரைவில் இதை பொலிசிடமும் அளிப்பேன் என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்