திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்கிறார் ரஜினிகாந்த்: தமிழக அரசியலில் பரபரப்பு

Report Print Santhan in இந்தியா
177Shares
177Shares
ibctamil.com

நடிகர் ரஜினிகாந்த் திமுக தலைவர் கருணாநிதியை இன்று சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் நடந்த ரசிகர்கள் சந்திப்பின் போது, நடிகர் ரஜினிகாந்த் நான் அரசியலுக்கு வருவது உறுதி, அதற்கான வேலைகளை கொஞ்சம் கொஞ்சமாக ஆரம்பிப்போம் என்று தெரிவித்திருந்தார்.

இதனால் ரஜினி ரசிகர்கள் அவரை வருங்கால முதலமைச்சர் மற்றும் ரஜினியின் தொகுதி இது தான் என்று குறிப்பிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை கோபாலபுரத்தில் உள்ள திமுக தலைவர் கருணாநிதியின் இல்லத்தில் கருணாநிதியை ரஜினிகாந்த் சந்திக்கவுள்ளதாகவும், இந்த சந்திப்பு இன்று மாலை நடைபெறவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் இந்த சந்திப்பின்போது நடிகர் ரஜினிகாந்துடன் அவரது ரசிகர் மன்ற நிர்வாகியும் திமுக தரப்பில் ஸ்டாலின் உள்ளிட்டோரும் இருப்பர்கள் என்றும் கூறப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்